`10 மணி வரைக்கும் நல்லா தான் பேசுனா அதுக்குள்ள எப்படி இது முடியும் - சேலம் இளம்பெண் மரணத்தில் மர்மம்!

selam woman died for problem with husband

சேலம் அம்மாப்பேட்டைபகுதியைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் - தீபிகா தம்பதியினர். 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த இவர்களுக்கு முகிலன் என்ற மகன் உள்ளார். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சமீபகாலமாக புயல் வீசத் தொடங்கியது. அறிவழகன் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது.

அதன்படி நேற்று இரவும் இதே காரணத்துக்கு இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை நடந்துள்ளது. சிறிது நேரத்தில் சண்டை முடிந்த நிலையில் அறிவழகன் குடும்பத்தினர் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் தீபிகா தூக்குபோட்டு கொண்டதாகவும், உதவ வாருங்கள் என அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீபிகாவை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே தீபிகா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் தீபிகா இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தீபிகா தற்கொலை குறித்து அறிந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் ஊருடன் திரண்டு அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். தீபிகா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்கள் புகார் கூறினர்.

இதுகுறித்து தீபிகாவின் தாயார் போலீஸில் அளித்த புகாரில், ``இரவு 10 மணி வரை தீபிகா என்னிடம் நன்றாக தான் பேசிக்கொண்டிருந்தார். என்னிடம் பேசிமுடித்த கொஞ்ச நேரத்தில் அவர் தற்கொலை செய்துவிட்டார் எனக் கூறினார்கள். இவ்வளவு சீக்கிரம் எப்படி அவர் தற்கொலை செய்திருக்க முடியும். இந்த சாவில் மர்மம் உள்ளது. அறிவழகன் வீட்டினரே அவரை அடித்து கொன்றுவிட்டு தூக்கில் மாட்டியுள்ளார்கள்" எனக் கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது அம்மாபேட்டை போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

You'r reading `10 மணி வரைக்கும் நல்லா தான் பேசுனா அதுக்குள்ள எப்படி இது முடியும் - சேலம் இளம்பெண் மரணத்தில் மர்மம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘டியர் பிரைம் மினிஸ்டர்... இதை எங்களுக்கு கற்றுக்கொடுங்கள்’ - இம்ரான் கானை விளாசிய ராம் கோபால் வர்மா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்