டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான் ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்

Chennai police arrested drug agent

இரண்டு மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவை சேர்ந்த சுகுசிமோன் ஒபினா (30) என்ற நபரை போதை பொருள் தடுப்பு போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் நடந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது ஒபினோ சென்னையில் போதைப்பொருள் விற்றது மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு மற்றும் புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஆலந்தூர் வேதகிரி தெருவை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் அவரது வீட்டில் இருந்து நிறைய போதை மருந்து மற்றும் மாத்திரைகளை கைப்பற்றினர். கார்த்திக்கை கைது செய்து விசாரித்தனர். அதில், கார்த்திக் சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்ப்பது தெரியவந்தது. போதை பழக்கம் கொண்ட கார்த்திக் முதலில் டாஸ்மாக் கடைக்கு சென்று முதலில் மது அருந்தி உள்ளார். அப்போது ஒரு நாள் இந்த புதிய போதை மாத்திரை பற்றி அறிந்துள்ளார். உடனே அதை வாங்கி போட்டுகொண்டுள்ளார்.

அதன் போதை பிடித்துப் போக தினமும் மாத்திரைகளை வாங்கி உள்ளார். இவ்வாறாக போக போக போதை மாத்திரைக்கே அடிமையாகி விட்டார். இதனால் வாங்கும் சம்பளம் போதை மாத்திரைக்கும், குடும்ப செலவுக்கும் போதவில்லை. அப்போது தான் போதை மாத்திரை விற்கும் ஏஜெண்டின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரின் மூலம் மாத்திரைகளை வாங்கி மாணவர்கள், இளைஞர்களிடம் விற்பனை செய்துள்ளார். இதுவே தொழிலாக மாறியுள்ளது. குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கு இதன்மூலம் கிடைக்கும் வருமானம் சொகுசான வாழ்க்கை யை கொடுத்துள்ளது. மாதம் சுமார் 70 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கவே இந்த தொழிலையே செய்ய ஆரம்பித்துள்ளார். அப்போது தான் போலீஸ் இவரை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான் ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `நான் உங்க மனைவி இல்லங்க' - உறவினரால் தருமபுரி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்