கனமழை தஞ்சை மாவட்டத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய அவலம்

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் கள்ளப்பெரம்பூர் பகுதியில் உள்ள 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக அணைக்கரையில் 51 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல் சூரக்கோட்டை ஓரத்த நாடு பகுதியிலும் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மழைநீர் வடிவதற்கான போதிய வசதி இல்லாததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

You'r reading கனமழை தஞ்சை மாவட்டத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய அவலம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிடிவி தினகரன் ஓ.பன்னீா் செல்வம் சந்திப்பு- பா.ம.க. தலைவா் விமா்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்