மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..

DRI seized 42 kg of smuggled gold during raid in Raipur, Kolkata, and Mumbai

மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி சுங்க வரி உயர்த்தப்பட்டது முதல் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்துதான் முன்பு தங்கம் கடத்தி வரப்பட்டது. சமீப காலமாக, சிங்கப்பூர், இலங்கை வழியாகவும் தங்கம் கடத்தி வரப்படுகிறது.

இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், கடந்த 8ம் தேதியன்று முக்கிய நகரங்களில் ரெய்டு நடத்தினர். இந்த திடீர் சோதனைகளில் மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 42 கிலோ தங்கக் கட்டிகளும், 500 கிராம் நகையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

You'r reading மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை... இணையதள சேவை முடக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்