அதிமுகவில் விருப்ப மனு ரொம்ப குறைவு: 2014-ல் 4500 பேர் மனு - தற்போது 1737 பேர் மட்டுமே விருப்பம்!

Lok Sabha election,very low turnout in admk wish petition

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு வாங்குவது இன்றுடன் நிறைவடைந்தது. மிக மிகக் குறைவாக மொத்தம் 1737 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அதிமுகவில் விருப்ப மனு கடந்த 4-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. 10-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், விருப்ப மனு எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மேலும் 4 நாட்கள் நீடிக்கப்பட்டு இன்று மாலை நிறைவடைந்தது.மொத்தம் 1737 பேர் மட்டுமே விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

ஜெயலலிதா இருந்த போது 2014-ல் போட்டி போட்டு 4500-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்த நிலையில் தற்போது அதில் பாதியளவுக்குக் கூட விருப்ப மனு வழங்காதது அதிமுக நிர்வாகிகளை அதிர்வடையச் செய்துள்ளது.

You'r reading அதிமுகவில் விருப்ப மனு ரொம்ப குறைவு: 2014-ல் 4500 பேர் மனு - தற்போது 1737 பேர் மட்டுமே விருப்பம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஷ்மீரில் பாக்.தீவிரவாதிகள் வெறித்தனம்: சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் தகர்ப்பு - 30-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்