பேச்சு நடத்த முதல்வருக்கு டிவிட்டரில் அழைப்பு விடுவது என்ன நியாயம்? கிரண்பேடிக்கு நாராயணசாமி கண்டனம்!

Puducherry CM condemns governor for calling for talks via Twitter

மாநில முதல்வரை பேச்சுவார்த்தைக்கு டிவிட்டரில் ஆளுநர் அழைப்பு விடுப்பது என்ன நியாயம்? என்று கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநருக்கு எதிராக 5-வது நாளாக தர்ணா போராட்டத்தைத் தொடரும் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், தமக்கு எல்லாம் தெரியும் என்பது போல காட்டிக் கொள்வதை ஆளுநர் கிரண் பேடி நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னை சிறைக்கு அனுப்புவேன் என்று பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

பேச்சுவார்த்தை நடத்த டிவிட்டர் மூலம் அழைப்பு விடுவது நியாயமா? பேச்சுவார்த்தைக்கு செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

கடந்த 7-ந் தேதி ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

You'r reading பேச்சு நடத்த முதல்வருக்கு டிவிட்டரில் அழைப்பு விடுவது என்ன நியாயம்? கிரண்பேடிக்கு நாராயணசாமி கண்டனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈசியா செய்யலாம் கத்திரிக்காய் ஃபிரை ரெசிபி..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்