கிரண் பேடியுடனான மோதல் நீடிக்கிறது - நாராயணசாமி 6-வது நாளாக தர்ணா!

Puducherry CM Narayana Samy continues dharna 6-th day

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பிலுமே மாறி, மாறி நிபந்தனை விதித்ததால் இ முபறியாகி 6-வது நாளாக போராட்டத்தை தொடர்கிறார் முதல்வர் நாராயணசாமி .

நாராயணசாமியின் தர்ணா போராட்டம் தொடர்ந்ததால் டெல்லிப் பயணத்தை பாதியில் முடித்து அவசரமாக புதுச்சேரி திரும்பினார் ஆளுநர் கிரண்பேடி. பேச்சுவார்த்தைக்கு வருமாறு நேற்றுமாலை 6 மணிக்கு நேரம் ஒதுக் கினார் கிரண்பேடி.ஆனால் பேச்சுவார்த்தைக்கு முதல்வர் நாராயணசாமி சில நிபந்தனைகள் விதிக்க, அதனை கிரண்பேடி மறுக்க இழுபறியாகி போராட்டம் தொடர்கிறது .

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைjசிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நாராயளி சாமியை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுச்சேரி வந்து நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். தாம் 7-ந் தேதி ஆளுநர் கிரண் பேடியிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்ட 39 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என நாராயணசாமி அறிவித்3ள்ளார்.

You'r reading கிரண் பேடியுடனான மோதல் நீடிக்கிறது - நாராயணசாமி 6-வது நாளாக தர்ணா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயல்நாட்டு திரைப்படங்களை 'காப்பி அடித்து' பழகிய கமல்... திமுக ‘பொளேர்’ அட்டாக்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்