ராமதாஸுக்கு நாட்டைப் பற்றி கவலை இல்லை, பணத்தைப் பற்றித்தான் கவலை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Stalin dares pmk alliance with admk

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்திருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். ராமதாசுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை கிடையாது, பணத்தைப் பற்றித்தான் கவலை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடனான கூட்டணியை பாமக உறுதி செய்துவிட்டது. 7 மக்களவைத் தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் ஒன்றையும் ஒப்பந்தம் செய்து உடன்பாடு கையெடுத்தாகியுள்ளது.

இந்த கூட்டணி உடன்பாடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலேயே தோற்றுப் போன கூட்டணி தான் அதிமுக-பாமக கூட்டணி என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், ராமதாசுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை கிடையாது. நாட்டைப் பற்றிய அக்கறை இல்லாத ராமதாஸ், பணத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர் என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

You'r reading ராமதாஸுக்கு நாட்டைப் பற்றி கவலை இல்லை, பணத்தைப் பற்றித்தான் கவலை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை - பாமகவைத் தொடர்ந்து பாஜகவுடன் தொகுதி உடன்பாடு முடிவாகிறது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்