அதிமுக கூட்டணியில்தான் த.மா.கா... அடித்து சொல்கிறார் ஞானதேசிகன்

TMC to join AIADMK Alliance

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அணியில் இடம்பெறுவது தொடர்பாக த.மா.கா.வில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஒருபக்கம் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது தமாகா தரப்பு.

ஆனால் அதிகாரப்பூர்வமானது அல்ல என அறிவிக்கிறார் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். இன்று மதுரையில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர்ராவை ஜி.கே.வாசன் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதிமுக, பாஜக நிர்வாகிகளை தாம் சந்திக்கவே இல்லை என மறுத்தார் ஜி.கே.வாசன். இந்நிலையில் அதிமுக கூட்டணியில்தான் த.மா.க. இடம்பெறும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக த.மா.கா. தரப்பில் குழப்பம் நீடித்து வருகிறது இத்தகைய பேட்டிகள் வெளிப்படுத்துகின்றன.

You'r reading அதிமுக கூட்டணியில்தான் த.மா.கா... அடித்து சொல்கிறார் ஞானதேசிகன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரையில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்