திமுக கூட்டணியில் கொங்கு நாடு கட்சிக்கு ஒரு சீட் - உதய சூரியன் சின்னத்தில் போட்டி என ஈஸ்வரன் அறிவிப்பு!

loksabha election Eswarans kongu nadu party got 1seat in Dmk alliance

திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டது.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி முடிவாகிவிட்டது.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தரப்பில் இரண்டு தடவை பேச்சு நடத்தியும், அக்கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதால் இழுபறியாக உள்ளது. இந்நிலையில் கொங்கு நாடு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணிப் பேச்சு நடத்தினார். முடிவில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஈஸ்வரன் தெரிவித்தார்.

You'r reading திமுக கூட்டணியில் கொங்கு நாடு கட்சிக்கு ஒரு சீட் - உதய சூரியன் சின்னத்தில் போட்டி என ஈஸ்வரன் அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3 லோக்சபா சீட் பிளஸ் 1 ராஜ்யசபா இடம்... திமுகவுடன் தேமுதிக பேரம் ‘சுபம்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்