வெளிநாட்டு சொத்தையும் கணக்கில் காட்டணும்...வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் தேர்தல் ஆணையம் மாற்றம்!

election commission changes in the candidates application for Loksabha election

வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களின் விண்ணப்பப் படிவங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம் .இனிமேல் போட்டியிடும் வேட்பாளர் மட்டுமின்றி அவர்களுடைய உறுப்பினர்களின் வெளிநாட்டு சொத்து விபரங்களையும் கண்டிப்பாக காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்காக திருத்தம் செய்யப்பட்ட வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் சொத்து வைத்திருந்தால் அதனை விண்ணப்பப் படிவத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

வேட்பாளர்கள் முழு சொத்து விபரத்துடன், ஆண்டு வருமான விபரம், 5 ஆண்டுக்கான வருமான வரி கட்டிய விபரம், பான் கணக்கு விபரம் உள்ளிட்டவைகளையும் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.


You'r reading வெளிநாட்டு சொத்தையும் கணக்கில் காட்டணும்...வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் தேர்தல் ஆணையம் மாற்றம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மார்ச் 1-ல் குமரி, 6-ந் தேதி சென்னையில் பிரதமர் மோடி பிரச்சாரம் - வழக்கம் போல வைகோ கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்