ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கே இரட்டை இலை - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

two leaves case, Delhi HC judgement favours to admk

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரு அணிகளாகப் பிரிந்த போது இரட்டை சிலைச் சின்னத்தை இரு தரப்பு மே சொந்தம் கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

பின்னர் இரு அணிகளும் இணைந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவுக்கு திரும்பப் பெற்றனர்.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து அமமுக தரப்பில் சசிகலாவும், தினகரனும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓ பிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது செல்லும் என்று கூறி சசிகலா, தினகரன் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம் .

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இரட்டை இலை வழக்கில் உயர்நீதிதிமன்ற தீர்ப்பு தினகரனுக்கு பாதகமாக வந்துள்ள நிலையில், குக்கர் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அம முகவினரிடையே எழுந்துள்ளது.

You'r reading ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கே இரட்டை இலை - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `கடுமையாக தாக்கினர்; இருந்தும் அதனை அழித்தார்' - பாக். ராணுவத்திடம் கைதாகும் முன் அபிநந்தன் செய்த வீரதீர செயல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்