பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கி ஹேக்கர்கள் கைவரிசை

Bjp official website defaced by hackers

பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் இச்சேவையை கட்சிப் பணிகளுக்காகவும், பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தி வருகின்றன. டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக் ராம் என சமூக வலைதளங்களில் பெரும் அரசியல் யுத்தமே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய அரசியல் கட்சிகளின் தகவல் தொடர்பு சாதனங்களில் இணைய தள சேவை பெரும் பங்கு வகிக்கிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் www bjp.org என்ற முகவரியுடன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பாஜகவின் சாதனைகள், வாக்குறுதிகள், பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்கள் என பல்வேறு தகவல்களுடன் இயங்கி வந்தது.பாஜகவின் இந்த இணையதளம் பக்கம் இன்று திடீரென முடக்கப்பட்டது. இணையதளத்தை முக்கிய ஹேக்கர்கள் பிரதமர் மோடி குறித்த கிண்டல் மீம்ஸ்களை பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இணையதளம் முடக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதனை மீட்டெடுக்கும் பணிகளில் பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் 2011-ல் காங்கிரஸ் தலைவராக சோனியா இருந்த போது அவருடைய 63-வது பிறந்த நாளில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கி ஹேக்கர்கள் கைவரிசை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேமுதிக கறார்... பாமக பிடிவாதம்... உடைகிறது அதிமுக கூட்டணி?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்