திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கும் முன்னரே ராமநாதபுரத்துக்கு வேட்பாளரை அறிவித்த முஸ்லீம் லீக் கட்சி

crisis in Dmk alliance over IUML announcement of candidate for Ramanathapuram

திமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பது ஒதுக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்து அறிமுகக் கூட்டமும் நடத்திவிட்டது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி . இந்த விவகாரம் தற்போது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடம் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் லீக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லீம் லீக் சார்பில் வேட்பாளராக கா.நவாஸ் கனி என அறிவித்து சென்னையில் வாழும் ராமநாதபுரம் தொகுதி உறவின்முறை ஜமாஅத் சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டமே நடத்தப்பட்டுள்ளது. நவாஸ் கனி எஸ் .டி கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் கூட்டணியில் தொகுதியே ஒதுக்காத நிலையில் அதெப்படி முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளரையே அறிவிக்கலாம் என கூட்டணிக் கட்சிகளும், திமுக தரப்பும் எதிர்ப்புக் காட்ட இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது

 

You'r reading திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கும் முன்னரே ராமநாதபுரத்துக்கு வேட்பாளரை அறிவித்த முஸ்லீம் லீக் கட்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வழக்கை வாபஸ் பெறுகிறேன்: திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்துங்க - தேர்தல் கமிஷனுக்கு டாக்டர்.சரவணன் கடிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்