அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளி யாகுமா?உத்தேசப் பட்டியல் இதுதானாம்

Loksabha election, admk alliance seat allotment list today

அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்ற உத்தேசப் பட்டியல் கசிந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தொகுதி உடன்பாடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.

யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து நேற்று அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் முன்னிலையில் கூடி ஆலோசித்தனர். தொகுதிப் பட்டியலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பின்னர் அறிவிப்பு வெளியாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரெனக் கூறி விட்டார். பாஜக, பாமக, தேமுதிகவுக்கான சில தொகுதிகளில் முடிவு எட்டப்படாததால் பட்டியல் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது

இந்நிலையில் இன்று மாலை அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற உத் தேசப் பட்டியல் கசிந்துள்ளது.

பாஜக தொகுதிகள்: கன்னியாகுமரி, தூத்துக்குடி,சிவகங்கை, ராமநாதபுரம் , கோவை ஆகிய 5 தொகுதிகள் .

பாமக தொகுதிகள்: மத்திய சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 தொகுதிகள் .

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்: வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.

என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி, தமிழ்மாநில காங்கிரசுக்கு தஞ்சை, புதிய நீதிக்கட்சிக்கு வேலூர், புதிய தமிழகத்துக்கு தென்காசி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

You'r reading அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளி யாகுமா?உத்தேசப் பட்டியல் இதுதானாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தந்தையின் வைக்கோல் போருக்கு தீ வைத்த கணவன் - உறவினர்களுடன் சேர்த்து எரித்துக்கொன்ற மனைவி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்