ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி ஏன்?ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ்

Loksabha election, tn govt issue notice to stella Marys college, questions Rahul Gandhi function:

தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன்? என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு .

கடந்த 13-ந் தேதி சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஜீன்ஸ், கருப்பு நிற டிசர்ட்டில் அசத்தலாக பங்கேற்ற ராகுல், ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கலந்துரையாடலில் பெரும்பாலும் அரசியல் தான் பேசப்பட்டது. பிரதமர் மோடியைத் தாக்கிப் பேசியது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது உள்பட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்தார்.

கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உட்பட எதிர்த்தரப்பில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள போது ராகுல் காந்தி நிகழ்ச்சியை நடத்தியது ஏன்? என்று விளக்கம் கேட்டு தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

You'r reading ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி ஏன்?ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக கூட்டணியில் யாருக்கு எந்தத் தொகுதி..?அதிகாரப்பூர்வமாக வெளியானது பட்டியல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்