திமுக கூட்டணியில் முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி

CPM announces candidates for Madurai, Coimbatore

திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாம் போட்டியிடும் கோவை, மதுரை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது.

 

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப் பட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மதுரை தொகுதிக்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன், கோவை தொகுதிக்கு பி.ஆர்.நடராஜன் ஆகியோரை வேட்பாளர்களை அறிவித்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி .

மதுரை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசன் கட்சியின் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து தற்போது அதன் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.சிறந்த எழுத்தாளரான சு.வெங்கடேசன் 2008-ல் எழுதிய காவல் கோட்டம் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.ஆர்.நடராஜன் கடந்த 2004 தேர்தலில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஆவார்

You'r reading திமுக கூட்டணியில் முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'கையை' வெட்டுவீர்களா... 'சூரியனை' மறைப்பீர்களா.. கொந்தளித்த தமிழிசை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்