திமுக வேட்பாளர்கள் யார்?இன்று பட்டியல் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு

Dmk releasing candidate list today

மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவதால் வேட்பாளர்கள் யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியது போக எஞ்சிய 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகள் அனைத்திலும் திமுக போட்டியிட உள்ளது.போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு, நேர்காணல் நடத்தி முடித்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

மக்களவைத் தொகுதிகளில் கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர் பாலு, ஆ.ராசா, தமிழச்சி பாண்டியன், ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி, பொன்முடி மகன் கவுதம சிகாமணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகன் கதிரவன் என பிரபலங்களின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்தது தான். ஆனாலும் இடைத் தேர்தல் நடைபெற உள்ள 18 திகளுக்கு யார் ? யாரை திமுக களம் இறக்கப் போகிறது என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

You'r reading திமுக வேட்பாளர்கள் யார்?இன்று பட்டியல் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 24 மக்களவை, 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்கள் - தினகரன் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்