ஜனநாயகமா..பாஸிசமா..என்ற கேள்வி எழுந்துள்ளது -கொந்தளிக்கும் வைகோ

vaiko talks about lok sabha election

தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியை ஆதரித்து பரப்புரையை மேற்கொள்ளும் வைக்கோ ஜனநாயகமா - பாஸிசமா என்ற கேள்வி எழுந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் -18ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. திமுகாவின் தேர்தல் பிரச்சாரம் 20-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை,கோபாலபுர இல்லத்துக்கு சென்ற அவர் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு, திமுக கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார். அதன்வகையில், வைக்கோவின் இல்லத்துக்குச் சென்ற கனிமொழி, அவரை சந்தித்து ஆசி பெற்றார். அதோடு, தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

பின் செய்தியார்களை சந்தித்த வைகோ, `தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெரும். இந்திய அரசியலில் திருப்புமுனையாக 2019ம் ஆண்டுத் தேர்தல் அமையும். ஜனநாயகமா - பாஸிசமா என்ற கேள்வி இந்த தேர்தலில் எழுந்திருக்கிறது. பாஜக தலைமையிலான கூட்டணி கட்ச்சிகள் வெற்றி பெறாது; வெற்றி பெறவும் கூடாது. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். அதனால், கனிமொழியை ஆதரித்து வரும் 22ம் தேதி முதல் பரப்புரை மேற்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக குறு மற்றும் சிறு தொழில்கள் முற்றிலும் தூத்துக்குடியில் நலிவடைந்துவிட்டது. அதனால், ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார்.

You'r reading ஜனநாயகமா..பாஸிசமா..என்ற கேள்வி எழுந்துள்ளது -கொந்தளிக்கும் வைகோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் அஜித்தை கிண்டல் செய்தேனா? சிம்புவின் தம்பி தரப்பு விளக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்