தமிழகத்தில் திமுக, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி -கருத்துக் கணிப்பு தகவல்

post poll election survey report

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில்,திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பானது தற்போது  வெளியாகியுள்ளது. 
 
 
 
அதிமுக, திமுக தங்களின் கூட்டணியை வலுவாக அமைத்துள்ளன. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.திமுகவின் தேர்தல் பிரச்சாரம் 20ம் தேதி தொடங்குகிறது. 
 
 
இந்நிலையில், டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், `திமுக கூட்டணி 34 இடங்களையும், அதிமுக 5 இடங்கள், பிற கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும், ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 22 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடுமுழுவதும் 543 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு  283 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 135,பிற கட்சிகள் 125 தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் திமுக, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி -கருத்துக் கணிப்பு தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓபிஎஸ் தன் மகனை வேட்பாளராக அறிவித்ததில் என்ன தவறு -கடுகடுத்த அமைச்சர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்