நினைவாற்றலுடன்தான் இருக்கிறாரா தலைவர் ஸ்டாலின் -கலகலத்த தமிழிசைnbsp

tamilisai soundararajan slams dmk leader stalin

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.
 
 
மக்களைத் தேர்தல் அறிக்கையை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட், மதுரை, கோவை, திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம், கேபிள் கட்டணங்கள் குறைக்கப்படும், கேஸ் மானியம் மீண்டும் நேரடியாக வழங்கப் படும் போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. வைக்கோ, திருமாவளவன் உள்ளிட்டோர் 'சிறப்பான தேர்தல் அறிக்கை' எனப் பாராட்டியுள்ளனர். 
 
ஆனால், எதிர்ச்சிகளோ கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், 'திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை, ஒரு பயனும் இல்லை' என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 'எதை வைத்துத் தான் திமுக தேர்தல் அறிக்கை தயாரித்தார்களோ  தெரியவில்லை. பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்க் கடன்  வழங்கப்படும் எனத் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே, மத்திய அரசின் முத்தரா திட்டத்தில்,  50 ஆயிரம், 5 லட்சம் 10 லட்சம் என்ற அடிப்படையில் 75 சதவீத பெண்களுக்குக் கடன் கொடுக்கப்பட்டு வருகிறது' என்றவர்
 
கீழடி ஆராய்ச்சி தொடங்கப்படும் என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நான்காவது முறையாக கீழடி ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கித் தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது என்பது மத்திய அரசின் தகவல் அறிக்கையிலேயே இருக்கிறது. எங்கே இருக்கிறார் ஸ்டாலின் ? தமிழகத்தில் தான் இருக்கிறாரா ? அல்லது நினைவாற்றலுடன் இருக்கிறாரா ? எனச் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை விளாசியுள்ளார்  தமிழிசை. 

You'r reading நினைவாற்றலுடன்தான் இருக்கிறாரா தலைவர் ஸ்டாலின் -கலகலத்த தமிழிசைnbsp Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விவசாயி உயிரோடு இருக்கானா..? இல்லையா...? சின்னத்தை வைத்தே தேர்தல் ஆணையத்தை சீண்டிய சீமான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்