டக்குனு குடியை நிறுத்தினா அவ்வளவுதானாம்..அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்றத பாருங்க

minister rajendra balaji controversial talk

குடிப்பவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. செய்தியாளர் சந்திப்பின்போது இவர் அளிக்கும் பதில்கள் விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கம். அந்த வகையில், இன்று விருதுநகர் மாவட்டம் ஆகிலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பாலாஜி.

அதில், பேசிய அமைச்சர், தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும். இதில், எந்த மாற்றுக்கருத்துமில்லை. குடிப்பவர்கள், உடனடியாக குடியை நிறுத்திவிட்டால் நரம்பு திடீரென தளர்ச்சி ஏற்படும். அதனாலதான், மதுவிலக்கை உடனடியாக கொண்டு வரவில்லை. குடிப்பவர்களின்  உடல்நலத்தைக் காக்கும் பொருட்டே படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்றார்.  

அமைச்சரின், இந்த பேச்சு விமர்சன வளையத்தில் சிக்கியுள்ளது.

You'r reading டக்குனு குடியை நிறுத்தினா அவ்வளவுதானாம்..அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்றத பாருங்க Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3 கட்டைப் பைகளில் துணிமணிகளுடன் சிறையில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்