அழகான அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன்..பிரச்சாரத்தில் கலக்கிய உதயநிதி

udhayanidhi stalin talks about tamilachi thangapandian

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டும் தமிழச்சி தங்க பாண்டியன் மிகவும் அழகான வேட்பாளர் எனப் பிரச்சார கூட்டத்தில் பேசி கலகலப்பை உண்டாக்கினார் உதயநிதி.

சென்னை, கோவை, மதுரை என அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து விட்டது. இந்நிலையில், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழா சைதாப்பேட்டையில் இன்று நடந்தது. விழாவில், உதயநிதி ஸ்டாலின்,  திமுக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி  தங்க  பாண்டியன்,  சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய உதயநிதி, ‘திமுக வெளியிட்ட அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது' என்றவர், தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டும் தமிழச்சி தங்க பாண்டியன் மிகவும் அழகான வேட்பாளர். அவரை, உங்கள் தொகுதி உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப ஆதரவு தாருங்கள்’ என்றார். உதயநிதி பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை எழவே, சுதாரித்துக் கொண்ட அவர், ‘தான் அழகு என்று கூறியது,  தமிழச்சி தங்க பாண்டியனின் தமிழ் பற்றை’ என்று கூறி சாமர்த்தியமாக நழுவினார். 

You'r reading அழகான அக்கா தமிழச்சி தங்கப்பாண்டியன்..பிரச்சாரத்தில் கலக்கிய உதயநிதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகனுக்காக களத்தில் குதித்த ஓபிஎஸ்... பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் உற்சாக வரவேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்