மாநில வாரியாக பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி.. தமிழ்நாட்டில் கடைசி இடமாம் - கருத்துக் கணிப்பு

opinion poll about pm modis influence in states

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி? என்பது குறித்து மாநில வாரியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் கடைசி இடம் கிடைத்துள்ளது.

சி-வோட்டர் ஐஏஎன்என் எஸ் இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 60 ஆயிரம் வாக்காளர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளின் முடிவை வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி செல்வாக்கு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தென் மாநிலங்களில் மோடியின் செல்வாக்கு மிகவும் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
 
இந்தக் கருத்துக்கணிப்பில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 74 சதவிகிதம் பேர் மோடியின் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். அதற்கடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் 68% பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை மாநிலங்களில் 45 சதவீதத்திற்கு மேல் எடுத்து பலமாக உள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் மோடியின் செல்வாக்கு மிக மோசமான நிலையிலிலேயே உள்ளது. கர்நாடகாவில் 38 சதவீதமும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 23 சதவீதமும் கேரளாவில் 7 சதவீதமும் மோடிக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

இந்தியாவிலேயே மோடி செல்வாக்கு மிக மிகக் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது. தமிழகத்தில் மோடிக்கு ஆதரவாக 2.2 சதவீதம் பேர் தான் கருத்து கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டு விவகாரம், காவிரி பிரச்னை, ஸ்டெர்லைட், இயற்கை சீற்றங்கள் போன்ற விவகாரங்கள் தமிழகத்தில் மோடியின் செல்வாக்கு குறைய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளன

You'r reading மாநில வாரியாக பிரதமர் மோடியின் செல்வாக்கு எப்படி.. தமிழ்நாட்டில் கடைசி இடமாம் - கருத்துக் கணிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராமநாதபுரமா.. கமலின் சர்ப்ரைஸ்...எகிறும் பட்டியல் எதிர்பார்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்