முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் உடல் நலக்குறைவு - இன்றைய பிரச்சாரம் ரத்து

tn cm edappadi Palani samis election campaign cancelled due to health reasons

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இன்றைய தேர்தல் பிரச்சாரப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியின் பிரதான பிரச்சாரகராக மாறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 22-ந் தேதி சேலம் மாவட்டம் கருமாந் துறையிலிருந்து தீவிர தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்.கடந்த 4 நாட்களில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வேனில் சுற்றுப்பயணம் செய்து சென்னையிலும் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

இன்று காலை 8 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கி மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்றைய பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

You'r reading முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் உடல் நலக்குறைவு - இன்றைய பிரச்சாரம் ரத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - "சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம்" - சுதர்சன நாட்சியப்பனின் சாபம் பலித்ததா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்