நாடக தின வாழ்த்துகள் மோடி..nbspமிஷன்nbspசக்திnbsp குறித்து ராகுல் கிண்டல் #MissionShakti

rahul gandhi slams modi for mission sakthi

இந்திய செயற்கைக்கோள்களை விண்வெளியில் பாதுகாக்கும் முயற்சியில்  ‘மிஷன் சக்தி’ சோதனை வெற்றி பெற்றதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்த ஏவுகணைகளைக் கொண்டுள்ள நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என்று  நாட்டு மக்களிடம் மோடி நேரலையில் தெரிவித்தார்.  

மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து #MissionShakti #PMModi #PMAdressToNation  ஆகிய ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. ‘மிஷன் சக்தி’ சோதனையைப் பிரதமர் மோடியின் சாதனை என்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். 

மிஷன் சக்தி’ சோதனை தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (DRDO) வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர், பிரதமர் மோடிக்கு எனது நாடக தின  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

You'r reading நாடக தின வாழ்த்துகள் மோடி..nbspமிஷன்nbspசக்திnbsp குறித்து ராகுல் கிண்டல் #MissionShakti Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியா புதிய சாதனை..’மிஷன் சக்தி’ வெற்றி -மோடியின் ‘சஸ்பென்ஸ்’ இதுவே...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்