கிடைத்தது பரிசுப் பெட்டி டிடிவிnbspதினகரனுக்குnbspசின்னம்nbspஒதுக்கியதுnbspதேர்தல் ஆணையம்

election commission allotted gift box symbol for ttv dinakaran

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில், அடுத்த மாதம் 18 தேதி மக்களவைத் தேர்தலுடன்  காலியாக உள்ள சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இதில், அதிமுக கூட்டணியில் ஓர் அணியும், திமுக கூட்டணியில் ஓர் அணியும் நேரடியாக மோதுகின்றன. இதைத் தவிர, எஸ்.டி.பி.ஐ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடுகிறது. அதிமுக-திமுகவுக்கு இணையாகத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சியாக அமமுக இருக்கிறது.

இதற்கிடையில்,  சின்னம் தொடர்பான வழக்கில் இரட்டை இல்லை அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ‘குக்கர்’ சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், ‘குக்கர்’ சின்னம் வழங்க முடியாது என்றும் அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச  நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

இந்நிலையில், அமமுக வேட்பாளர் அனைவருக்கும் ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அமமுக-வின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொது சின்னமாக ‘பரிசுப் பெட்டி’ வழங்கப்பட்டுள்ளது.  

You'r reading கிடைத்தது பரிசுப் பெட்டி டிடிவிnbspதினகரனுக்குnbspசின்னம்nbspஒதுக்கியதுnbspதேர்தல் ஆணையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துரித உணவுகள் தூக்கி வரும் கோளாறுகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்