நாட்டை உலுக்கும்nbspரபேல்nbspபேர ஊழல் புத்தகம்nbspவெளியிடத்nbspதடை!

rafael book release has stooped by election commission

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ‘ரபேல் பேர ஊழல்’ புத்தகத்தை வெளியிடத்  தேர்தல் ஆணையம் தடை வித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பதந்த்த்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக ஆளும் பாஜக  அரசைக்  கடுமையாக விமர்சித்து வருகிறது காங்கிரஸ். இந்த உழல் ஒப்பந்தம் குறித்து பிரதமர் ஏன் பேச மறுக்கிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.

இந்நிலையில், ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் புத்தகம் இன்று வெளியிடப்பட இருந்தது. எஸ்.விஜயன் எழுதிய புத்தகத்தை, இந்து குழும தலைவர் என்.ராம் வெளியிட இருந்தார். இன்று மாலை 5 மணியளவில் [புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த நிலையில், புத்தகத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷன் தடை விதித்துள்ளார். அதோடு, மீறி புத்தகத்தை வெளியிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து, தேனாம்பேட்டை புத்தகக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட ‘ரபேல் பேர ஊழல்’ புத்தகங்களைத் தேர்தல் பறக்கும்படை கைப்பற்றியது.

You'r reading நாட்டை உலுக்கும்nbspரபேல்nbspபேர ஊழல் புத்தகம்nbspவெளியிடத்nbspதடை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுட்டெரிக்கும் வெப்பம் – குளுமையான யோசனை சொன்ன நடிகை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்