ஊட்டி மலைப்பாதையில் விபத்து - துணை முதல்வர் ஓபிஎஸ்சின் பிரச்சார வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது

Admk leader OPS propoganda vehicle fallen near Ooty

துணை முதல்வர் ஓ பிஎஸ் பிரச்சாரம் செய்யும் வேன் ஊட்டி அருகே சாலையில் திடீரென தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓ பிஎஸ் அந்த வேனில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.


நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஊட்டி மலைப் பகுதியில் உள்ள ஊர்களில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். கூடலூரில் இருந்து பிரச்சாரம் தொடங்க இருந்ததால் முன்கூட்டியே, ஊட்டியில் இருந்து அவர் பிரச்சாரம் செய்யும் வேன் கொண்டு செல்லப் பட்டது. ஓ.பன்னீர் செல்வம் வேறு ஒரு காரில் சென்றார். நடுவட்டம் என்ற இடம் அருகே சென்று கொண்டிருந்த போது பிரச்சார வேன் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த டிரைவரும், உதவியாளரும் லேசான காயமடைந்தனர்.

வேனில் செல்லாமல் தனியாக காரில் சென்றதால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ஷ்டவசமாக தப்பினார். ஓபிஎஸ்சின் பிரச்சார வாகனம் கவிழ்ந்த தகவல் கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த வேனில் ஓபிஎஸ் பயணிக்கவில்லை என்ற செய்தி வெளியானவுடன் பெரும் நிம்மதி அடைந்தனர்.

You'r reading ஊட்டி மலைப்பாதையில் விபத்து - துணை முதல்வர் ஓபிஎஸ்சின் பிரச்சார வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை இல்லை - அப்பல்லோ கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்