பாஜக தேர்தல் அறிக்கை என்னாச்சு...தாமதத்திற்கு காரணம் இதுதானாம்

Loksabha election, reasons behind delay of bjp manifesto

மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நாட்டின்
பிரதான கட்சியும், 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக இன்னும் தேர்தல்
அறிக்கையை வெளியி டாமல் உள்ளது . காங்கிரசின் அறிக்கைக்கு சவாலாக புதிய பல அதிரடி அறிவிப்புகளை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதே தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியான காங்கிரசோ, மூன்று தினங்களுக்கு முன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதில் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் வாரி வழங்கி, பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இதனால் காங்கிரசின் தேர்தல் அறிக்கை சாத்தியமில்லாதது என்றும், முழுக்க முழுக்க பொய் என்றும் பாஜக தரப்பில் விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியான பின்பும் பாஜக தரப்பு இன்னும் அறிக்கை வெளியிடாமல் மவுனம் சாதிப்பதை எதிர்க் கட்சிகள் பலவும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளன. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் கிண்டலாக, பிரதமரின் தேர்தல்
அறிக்கை வெளிவரும் அந்த
நல்ல நாள் (அச்சே தின்) தேர்தல்
முடிந்த பிறகாவது வருமா? என்று கிண்டலடித்துள்ளார்.

முதலில் காங்கிரஸ் தேர்தல்
அறிக்கை வெளிவரட்டும், அதில்
உள்ள அம்சங்களைப் பார்த்துவிட்டு
பிறகு அதற்கேற்ப நமது
தேர்தல் அறிக்கையை மாற்றிக்
கொள்ளலாம் என்கிற திட்டமே
பாஜக தேர்தல் அறிக்கை வெளியாக
தாமதம் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியான நிலையில் அதனை பாஜகவினர் வெளிப்படையாக விமர்சித்தாலும் உள்ளுக்குள் பதைபதைப்பு இருப்பதாகவே தெரிகிறது.

இதனால் காங்கிரசுக்கு
போட்டியாக பாஜகவும் தர்தல்
அறிக்கையில் சில மாற்றங்களை
செய்து வெளியிட முடிவு
செய்திருப்பதாக தெரிகிறது. ஏற்கெனவே ஏராளமான வாய்ச்சவடால் வாக்குறுதிகளை கொடுத்து கடந்த 5 வருடங்களில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் பாஜக மீது உள்ள நிலையில், புதிதாக
மக்களை கவரும் வகையில் அடுத்து எந்த வகையில் புது குண்டு போடலாம் என்ற தீவிர
சிந்தனையில் பாஜக தரப்பில் இருப்பதால் தான் தாமதம் என்று கூறப்படுகிறது. எப்படியும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாவது தேர்தல் அறிக்கையை பாஜக தரப்பு வெளியிட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading பாஜக தேர்தல் அறிக்கை என்னாச்சு...தாமதத்திற்கு காரணம் இதுதானாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முகத்தில் ஆசிட் வீசிடுவாங்க...எனக்குப் பாதுகாப்பு இல்லை! -பிரசார மேடையில் கதறிய ஜெயப்பிரதா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்