தொடர்ச்சியாக 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு - குடிமகன்கள் பாடு தான் திண்டாட்டம்

Election 2019, tn govt orders to close tasmac shops for 3 days.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தினம் உள்ளிட்ட 48 மணி நேரம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் ஆகிய நாட்களில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 16-ந் தேதி காலை 10 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் 18-ம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ந் தேதி ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்படுகிறது.

அதனடிப்படையில், மேற்கூறிய நாட்களில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடப்பட வேண்டும்.
இந்த நாட்களில் மதுவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதால், கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தும், சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் பாடு திண்டாட்டமாகப் போகிறது.

You'r reading தொடர்ச்சியாக 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு - குடிமகன்கள் பாடு தான் திண்டாட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிகரிக்கும் காற்று மாசு..குறைகிறது இந்தியர்களின் ஆயுட்காலம்...எச்சரிக்கும் ‘ரிப்போர்ட்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்