மோடியின் முகம் கேமராவில் பளபளப்பாக...இதுதான் காரணமாம் குமாரசாமியின் நையாண்டி விளக்கம்

Modi glows because he applies waxs says kumaraswamy

ஊட்டங்களில் பிரதமர் மோடியின் முகம் அடிக்கடி காட்டப்படுவதற்கான காரணம் குறித்தான விளக்கம் அளித்துள்ளார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறு நாள் தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியுடன், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி அட்சி செய்து வருகிறார். இங்கு, காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுவதால் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. அதன் வகையில், பெங்களூருவில் நடந்த பிரசார பேரணி ஒன்றில் அம்மாநில முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய அவர், ‘மோடி தினந்தோறும் காலையில் எழுந்த பிறகு, முதல் வேலையாக மேக்கப் அல்லது வேக்ஸ் போட்டுக் கொள்கிறார். அதனால் தான் பளபளப்பாக கேமரா முன் மின்னுகிறார் மோடி. ஆனால், நாங்கள் தினமும் குளிப்பதோடு சரி மறுநாள் தான் முகம் கழுவுவோம். அதனால்தான் எங்கள் முகங்கள் கேமராக்களில் அழகாக இல்லை. மோடி தினமும் மேக்கப் போட்டுப் பளபளப்பாக இருப்பதால் தான் தான் ஊடகங்கள் மோடியை மட்டுமே காட்டுகிறார்கள்’ என வேடிக்கையாகப் பேசினார்.

You'r reading மோடியின் முகம் கேமராவில் பளபளப்பாக...இதுதான் காரணமாம் குமாரசாமியின் நையாண்டி விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆசை.. தோர் நடிகரின் கனவு நிறைவேறுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்