மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ். டீம் காணாமல் போகும்- டி.டி.வி. தினகரன்

eps and ops who calls modi as daddy the team will disappear-ttv dinakaran

மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ். டீம் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள் என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க இன்னும் 8 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராக பிரசாரம் செய்து வருகிறார்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்த தினகரன் மக்கள் மத்தியில் பேசியதாவது: சொல் பேச்சை கேட்கும் கிளி போல் மத்திய பா.ஜ. அரசின் பேச்சை கேட்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. இதனால் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ்., ஒ.பி.எஸ். டீம் இந்த தேர்தலோடு காணாமல் போகும். ஆர்.கே.நகர் போன்று தற்போதைய தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டும். அந்த கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading மோடியை டாடி என அழைக்கும் ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ். டீம் காணாமல் போகும்- டி.டி.வி. தினகரன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்துஜாவுக்கு ட்ரெய்னிங் கொடுக்கப்போகும் விஜய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்