அதிமுகவில் மூன்றாவதாக ஒரு இலை இருக்கு! கமல்ஹாசன் பளிச்

kamalhassan slams ttv dinakaran

‘பரிசுப்பொட்டி கொடுத்து அரசின் கஜானாவை தட்டி எடுத்து சென்று விடுவார்’ என டிடிவி தினகரனை விமர்சித்து பேசினார் கமல்.  

தமிழகத்தில் நான்கு நாட்களில் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால், அனல் பறக்கும் பிரசார களம் தீவிரமடைந்து உள்ளது. ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் என அனைவரும் பிரசாரத்தில் சுழன்று வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன் வகையில், பிரசாரத்தில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியை விமர்சித்துப் பேசிய கமல், அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

தஞ்சை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சம்பத் ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் அமைப்பைச் சேர்ந்த இடைத்தேர்தல் வேட்பாளர் துரைசாமியை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, பேசிய அவர், ‘அதிமுகவின் மூன்றாவதாக துளிர்விட்ட இலை டிடிவி தினகரன் என்றும் உங்களுக்கு சின்ன பரிசுப்பொட்டியை கொடுத்து விட்டு அரசின் கஜானாவைத் தட்டிக்கொண்டு செல்வார், பெரிய பெரிய கட்டடங்களை கட்டிவிடுவார் டிடிவி’ என விமர்சனம் செய்து பேசினார். 

You'r reading அதிமுகவில் மூன்றாவதாக ஒரு இலை இருக்கு! கமல்ஹாசன் பளிச் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தல் ஆணையம் 'யூஸ்லெஸ்' ; ஓட்டு மெஷின் 'வேஸ்ட்'- சந்திரபாபு நாயுடு கொந்தளிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்