வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்க்கும் டூப்ளிகேட் மோடி ..! நோட்டீஸ் விட்ட தேர்தல் ஆணையம்

Loksabha Election 2019, EC sends notice to duplicate modi who is contesting against PM modi in Varanasi

உ.பி.யில் பிரதமர் மோடிக்கு எதிராக அவரைப் போன்றே தோற்றமுடைய சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் ஓட்டுக்கு நோட்டு தரப்போவதாக டூப்ளிகேட் மோடி, சர்ச்சைக்குரிய கருத்துக் கூறியதற்காக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சகாரான்பூரை சேர்ந்தவர் அபிநந்தன் பதக். இவர் பிரதமர் நரேந்திர மோடி போன்ற உருவத் தோற்றம் கொண்டவர். கடந்த 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். திடீரென கடந்த 2018-ல் காங்கிரஸில் இணைந்தார். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் சுயேச்சையாக அபிநந்தன் பதக் போட்டியிடுகிறார். மேலும் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்வேன் என்றும் அறிவித்துள்ளார்.

லக்னோ தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், ஒரு ஓட்டுக்கு ஒரு நோட்டு என்பதே எனது பிரச்சார கொள்கை என்று தெரிவித்தது பெரும் சர்ச்சையாகி தேர்தல் ஆணையத்துக்கும் புகார் சென்று விட்டது.

இதனால், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் அபிநந்தன் பதக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்க்கும் டூப்ளிகேட் மோடி ..! நோட்டீஸ் விட்ட தேர்தல் ஆணையம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? - ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பும் பாஜக

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்