எந்த திசையை நோக்கி செல்கிறோம்..செல்லும் தூரம் அதிகம்! சொல்கிறார் கமல்ஹாசன்

kamalhassan slams admk government

நாம் மெத்தனமாக இருந்ததால் அரசு மக்களை நோக்கி சுடுகிறது என ஆளும் அதிமுகவை விமர்சனம் செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. அதனால், இறுதிக் கட்ட பிரசாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கன்னியாகுமரி மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எபினேசரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் கமல். அப்போது, பேசிய அவர், ‘மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 8 வழி சாலை வேண்டாம் என மக்கள் சொன்ன பிறகும் யாருக்காக சாலையைபோட துடிக்கிறார்கள்.

நாம் மெத்தனமாக இருந்ததால் அரசு மக்களை நோக்கி சுடுகிறது. தமிழகம் எந்த திசையை நோக்கி செல்ல வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கு, இங்குத் திரண்டிருக்கும் கூட்டமே சாட்சி. ஒரு புரட்சியின் அமைதியான ஆரம்பம் இது, அதே நேரத்தில் செல்லும் தூரம் அதிகம் என குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நீதி மையம் இந்தியாவின் கொல்லை வாசல் இல்லை; இந்த அரசை அகற்றி மக்களின் அரசியல்.  மக்களின் ஆட்சியாக, மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனக் கூறினார்.

You'r reading எந்த திசையை நோக்கி செல்கிறோம்..செல்லும் தூரம் அதிகம்! சொல்கிறார் கமல்ஹாசன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிரிமினல் வழக்கு வேட்பாளர்கள்.. அன்புமணி இரண்டாமிடம், முதலிடத்தில் யார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்