பா.ஜ. அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பேன்- கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

support either bjp or congress-kamal haasan

மக்களவை தேர்தலுக்கு பிறகு பா.ஜ. அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் முழு நேர அரசியல்வாதியாக செயல்படுவதற்கு வசதியாக இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்தில் அறிவித்தார். இந்தியன் 2 படம்தான் எனது கடைசி படம் என்று அதிரடியாக அறிவித்தார்.

தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது அவர் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கிடையே என்.டி.டி.வி.

பிரனோய் ராய்க்கு கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேர்தலுக்கு பிறகு பா.ஜ. அல்லது காங்கிரசுக்கு ஆதரவு அளிப்போம். ஆனால் நிபந்தனைகள் அடிப்படையில்தான் ஆதரவு இருக்கும். குறைந்தபட்சம் எந்த கட்சி தமிழகத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்கிறதா அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்போம்.
எங்களை பொறுத்தவரை இரண்டு கட்சிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும்?. நாங்கள் 3வது ஆப்ஷனை விரும்புகிறோம். ஆனால் நாங்கள் வெறும் மாநில கட்சிதான். அதை நாங்கள் தெரிந்தே உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading பா.ஜ. அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பேன்- கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்