கல்யாணமே இன்னும் முடியலே... குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க... மோடியின் நம்பிக்கைதான் என்னே!!

Ahead of poll results, PM Narendra Modi directs officials to prepare 100-day agenda

‘‘கல்யாணமே இன்னும் நடக்கலே... அதற்குள்ளே குழந்தைக்கு பெயர் வைப்பதா?’’ - இப்படித்தான் கேட்பீர்கள், இந்த செய்திதையப் படித்தால்!

ஆம். மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு மட்டுமே முடிவடைந்துள்ளது. இன்னும் ஆறு கட்டத் தேர்தல் முடிந்து மே 23ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்பிறகே, யார் ஆட்சிக்கு வருவார் என்பது தெரிய வரும். ஆனால், தானே மீண்டும் பிரதமராக வருவேன் என்று மோடி உறுதியாக நம்புகிறார்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் நூறு நாட்களில் என்னென்ன திட்டங்களை செய்யலாம் என்று திட்டமிடுவதற்கு பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரதமர் அலுவலக அதிகாரிகள், மோடியின் 2வது ஆட்சியில் முதல் நூறு நாளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தயாரித்து வருகிறார்களாம்.

அதே போல், நாட்டின் உற்பத்தி விகிதத்தை(ஜி.டி.பி.) அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்களை வரையறை செய்வதற்கும், புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் மற்றும் பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் விஜயராகவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். அதே போல், திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்காக, சிகப்பு நாடா தடைகளை அகற்றுவதற்குரிய சாத்தியக்கூறுகளை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாம்.

இப்போது சொல்லுங்கள்... தலைப்பில் நீங்கள் படித்தது நியாயமான சந்தேகம்தானே!

You'r reading கல்யாணமே இன்னும் முடியலே... குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க... மோடியின் நம்பிக்கைதான் என்னே!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேசாதீங்க...! யோகிக்கு 72 மணி நேரம், மாயாவதிக்கு 48 மணி நேரம் தடை விதித்தது தேர்தல் ஆணையம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்