வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தா?- உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

Loksabha election, election commission says, no decision yet to taken on Vellore election cancellation

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற உச்சகட்ட குழப்பத்தில் அத்தொகுதி அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் இருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷெய் பாலி சரண் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை எந்த உத் தரவும் பிறப்பிக்க வில்லை என்றும் ஷெய் பாலி சரண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதி தேர்தல் விவகாரத்தில் தொடர்ந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, அத்தொகுதி மக்களிடையே குழப்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

You'r reading வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தா?- உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை தேர்தல் ஆணையம் திட்டவட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை விமான நிலைய பெண் ஊழியர் மர்ம சாவு: அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்