போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு

Acid attack on woman in Uttar Pradesh

போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு
உத்தர பிரதேசத்தில் ஒரு வாரத்தில் போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது மர்ம நபர்கள் திராவகத்தை வீசியதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பெண் காவல்துறையில் சேர்வதை தனது கனவாக கொண்டு இருந்தார். இதற்காக கடுமையான பயிற்சிகள் மற்றும் அது தொடர்பான தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராகி வந்தார். அண்மையில் நடந்த காவலர் தேர்வுக்கான தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர தகுதி பெற்றார். இன்னும் ஒரு வாரத்தில் அந்த பெண் காவல் துறை பணியில் சேர இருந்தார்.
இந்த நிலையில் அந்த பெண் இன்று சாலையில் சைக்களில் சென்று கொண்டியிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பெண் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் மீது திராவகத்தை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த ஆசிட் தாக்குதலில் அந்த பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது..

உடல் முழுவதும் படுகாயம் அடைந்த பெண் ரேபரேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர். திராவக வீச்சில் காயமடைந்த அந்த பெண் அடுத்த வாரம் காவல்துறை பணியில் சேர இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடியை எதிர்த்து போட்டியில்லை; மாயாவதி கட்சிக்கு ஆதரவு - 'பல்டி' அடித்த பீம் சேனா தலைவர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்