விரலில் மை வைக்காமலேயே வாக்கு பதிவு செய்த வாக்காளர்கள்

Voters who voted without putting ink on the finger

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் களக்காடு வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் விரலில் மை வைத்து சென்றனர்.


தமிழகத்தில் இன்று 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுவாக வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்ய வரும் போது முதலில் பூத் சிலிப் கொண்டு வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் செக் செய்யப்படும். பின், வாக்காளர் அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகளை வைத்து வாக்காளர் அவர்தானா என்பது உறுதி செய்யப்படுவார். அதன்பிறகு வாக்காளரின் இடது கையின் ஆட்காட்டி விரலில் அழியா மை இடப்படும். அதன்பிறகுதான் வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்வார். ஆனால் இன்று தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவால் வாக்குகளை பதிவு செய்த பின்னர் சில வாக்காளர்களின் விரலில் அழியா மை வைக்கப்பட்டது. களக்காடு வாக்குச்சாவடியில் இந்த சம்பவம் நடந்தது.
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் களக்காடு நகர வாக்குச்சாவடி ஒன்றில் சில வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் தங்களது விரலில் மை வைத்து சென்றனர். அந்த வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை காரணமாக இந்த சம்பவம் நடந்ததுள்ளது

You'r reading விரலில் மை வைக்காமலேயே வாக்கு பதிவு செய்த வாக்காளர்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எனக்கா ஓட்டு இல்லை; போராடி உரிமையை பெற்ற சிவகார்த்திகேயன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்