ஊரு பெயரை மாத்துங்க... மேனகா மீண்டும் சர்ச்சை!

Back from 48-hr poll ban, Maneka Gandhi wants Sultanpur renamed Kushbhawanpur

நம்மூரில், ‘ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப் போல, மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மேனகா காந்திக்கு எதையாவது ஏடாகூடமாக பேசவில்லை என்றால் தூக்கம் வராது.
உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மேனகா காந்தி, அங்கு கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது, ‘‘முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தால்தான் என்னிடம் எந்த உதவியும் கேட்டு வரலாம். ஓட்டு போடாமல் என்னிடம் எந்த வேலையையும் எதிர்பார்த்து வரக் கூடாது’’ என்று பேசினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்தி்ல் புகாரும் கொடுக்கப்பட்டது. இதனால், அவருக்கு 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


இந்த தடைக் காலம் முடிந்து நேற்று அவர் சுல்தான்பூருக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் ஊர்வலமாகச் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ‘‘இந்த தொகுதியின் தாயாக நான் வந்துள்ளேன். சுல்தான்பூர் என்ற இந்த ஊர், லார்டு குசா(ராமரின் மகன்) பூமி. எனவே, இந்த ஊருக்கு குஷ்பவான்பூர் என்று பெயரை மாற்ற வேண்டும்’’ என்றார்.


மேலும் அவர், ‘‘மக்கள் அதிகளவி்ல் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பப்படி இந்த தொகுதியில் மக்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.


ஒவ்வாரு முறையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்பும் மேனகாகாந்தி, இப்போது சுல்தான்பூரின் பெயரை மாற்றச் சொல்லயிருப்பதும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது.

 

‘ஏ’ கிராமங்களுக்குத்தான் எல்லாம்! மேனகா மீண்டும் சர்ச்சைப் பேச்சு!!

You'r reading ஊரு பெயரை மாத்துங்க... மேனகா மீண்டும் சர்ச்சை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `பலருக்கும் கிடைக்காத வாய்ப்பை எனக்கு தோனி கொடுத்தார்' - கோலி சொல்லும் விசுவாச கதை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்