சட்டசபைத் தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்! ரஜினி அறிவிப்பு!!

Rajini said that he is very much ready to face next tamilnadu legislative assembly elections

சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.


ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளி்த்த பேட்டி வருமாறு :


* தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே நடந்துள்ளது. இது குறைந்துள்ளதற்கு என்ன காரணம்?
70 சதவீதம் என்பது ஓ.கே.தான். சென்னையில்தான் 50 சதவீதத்தை ஒட்டி இருக்கிறது. தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் நிறைய பேர் வெளியூர்களுக்கு போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

* வெயில் அதிகமாக இருந்ததும், அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்காததும் வாக்குப்பதிவு குறைவுக்கு காரணமாக இருக்கிறதா?
அது கண்டிப்பாக தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டிய விஷயம்தான்.

* தேர்தலுக்கு பின்பு எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்று சொல்கிறார்களே?
மே 23ம் தேதிக்கு பிறகு பார்ப்போம்.

* மோடியே மீண்டும் பிரதமராக வருவாரா?
மே 23ம் தேதி தெரிந்து விடும்.
* நீங்கள் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பிப்பதாக சொன்னீர்களே?
தேர்தல் வரட்டும். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற மாட்டேன்.
* சட்டசபைக்கு எப்ப தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா?
எப்ப, எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தேர்தல் நாள்: ரஜினி, அஜித், விஜய் ஓட்டுப் போட்டாச்சு.. நீங்க ஓட்டுப்போட போகலையா?

You'r reading சட்டசபைத் தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்கத் தயார்! ரஜினி அறிவிப்பு!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேர்தல் பிரசாரத்தின் போது ஹர்திக் படேல் கன்னத்தில் ‘பளார்’ !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்