பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

Demonstration in all districts condemning the Ponparappi incident

பொன்பரப்பி வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொல்.திருமாவளவன் கூறினார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்த போது, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், சிதம்பரம் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் போட்டு உடைத்தனர். இதனால் பா.ம.க. மற்றும் வி.சி.க. கட்சியினருக்கு இடையே மோதல் நடைபெற்றது. மேலும், வரையப்பட்ட 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இரு சக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த வன்முறை வெறியாட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இது குறித்து கூறுகையில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து வரும் 24ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் என்று கூறினார்.

ஜனநாயகப் படுகொலை..ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்! –பாஜக, அதிமுகவை விளாசும் தொல்.திருமாவளவன்

You'r reading பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்- திருமாவளவன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொன்னமராவதியில் கலவரம்; 1000பேர் மீது வழக்குப் பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்