மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கும் தடை! தேர்தல் ஆணையம் அதிரடி

election commission stop modi web series

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘’பிஎம் நரேந்திர மோடி’’ என்ற படத்தை வெளியிடத் தேர்தல் ஆணையம் தற்போது தடை விதித்தது. அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று இணையதள தொடருக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நரேந்திர மோடி மற்றும் எந்த அரசியல் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையும் மின்னணு ஊடகங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வாழ்க்கை வரலாற்று படங்களின் வீடியோக்களை கூட பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், 5 பகுதிகளைக் கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை ஈராஸ் நவ் தயாரித்து தனது தளத்திலேயே ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. இதனால், தேர்தல் நேரத்தில் அந்தத் தொடரை ஒளிபரப்பக் கூடாது என ஈராஸ் நவ் நிறுவனத்துக்குத் தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்தத் தொடர் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை மிரட்டும் கூட்டணிக் கட்சி!

You'r reading மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கும் தடை! தேர்தல் ஆணையம் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவில் ராகுல் காந்திக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்