நீங்க ஓட்டு போடலேன்னா ஒன்னும் பிரச்னையில்லை... வருணும் சர்ச்சையை கிளப்பினார்!

No problem if you dont vote for me, Varun Gandhi tells Muslims

மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ''முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம் என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மேனகா காந்தி, உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் போட்டியிடுகிறார். அவர் அங்கு கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது, ‘‘முஸ்லிம்கள் எனக்கு போடா விட்டால், என்னிடம் எந்த வேலையும் கேட்டு வரக் கூடாது. ஓட்டு போட்டால்தான், நானும் அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியும்’’ என்று பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் கொடுக்கப்படவே, அவரது பிரச்சாரத்திற்கு 48 மணி நேர தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேனகா காந்தியின் மகனும், பிலிபித் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான வருண் காந்தி நேற்று தனது தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், ‘‘முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு ஓட்டு போட்டால் மகிழ்ச்சி. ஓட்டு போடலேன்னா கூட நோ பிராப்ளம்! நீங்கள் என்னிடம் ஏதாவது வேலை ஆக வேண்டுமானால் வரலாம். அதே சமயம், எனது தேனீருக்கு உங்கள் ஓட்டு என்னும் சர்க்கரை இருந்தால், தேனீர் இனிக்கும்’’ என்று பேசினார்.

இது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுபான்மையினரை குறிப்பிட்டு பேசுவதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

‘ஏ’ கிராமங்களுக்குத்தான் எல்லாம்! மேனகா மீண்டும் சர்ச்சைப் பேச்சு!!

You'r reading நீங்க ஓட்டு போடலேன்னா ஒன்னும் பிரச்னையில்லை... வருணும் சர்ச்சையை கிளப்பினார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னையில் சாலையில் பைக் ரேஸ்: 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்