காம்பீர் .. விஜேந்தர் சிங் ..! டெல்லியில் விளையாட்டு நட்சத்திரங்களை களமிறக்கிய காங்., பாஜக

In Delhi, Congress and bjp gave seat to famous sports personalities

டெல்லயில் பிரபல விளையாட்டு நட்சத்திரங்களை மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கி விட்டு காங்கிரசும் பாஜகவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தெற்கு டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரபல குத்துச் சண்ட வீரர் விஜேந்தர் சிங்கும், கிழக்கு டெல்லியில் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக சார்பிலும் தேர்தலில் களம் காண்கின்றனர்.

டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு இந்த முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடைசி நிமிடம் வரை கூட்டணி தொடர்பாக காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் தனித்து விடப்பட்டது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதால் நேற்று 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. இதில் தெற்கு டெல்லியில், ஒலம்பிக்கில் முதல்முறையாக இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கை நிறுத்தி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது காங்கிரஸ்.

பாஜகவும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான கவுதம் காம்பீரை கிழக்கு டெல்லி தொகுதியில் நிறுத்தியுள்ளது. கடந்த டிசம்பரில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற காம்பீர், சமீத்தில் தான் பாஜகவில் இணைந்தார். அவரை உடனடியாக வேட்பாளராக்கி அழகு பார்த்துள்ளது பாஜக மேலிடம் . இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சென்ற காம்பீர், பிரமாண்ட ஊர்வலம் நடத்தி டெல்லி வீதிகளில் தனது செல்வாக்கை காட்டினார்.

`எனது புற்றுநோயை குணப்படுத்தியது இது தான்' - சாத்வி பிரக்யா பேச்சு

You'r reading காம்பீர் .. விஜேந்தர் சிங் ..! டெல்லியில் விளையாட்டு நட்சத்திரங்களை களமிறக்கிய காங்., பாஜக Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `எனது புற்றுநோயை குணப்படுத்தியது இது தான்' - சாத்வி பிரக்யா பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்