பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்

Conspiracy against CJI, Money and power cannot run top court: SC judges

பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம்

கடந்த 4,5 ஆண்டுகளாக பண பலம், அதிகார பலத்தால் உச்ச நீதிமன்றத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் நடக்கிறது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் உச்ச நீதிமன்றத்தை இயக்க நினைத்தால் நிறைவேறாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதித்துறை மீது போர் தொடுக்கப்படுகிறது. அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்று ரஞ்சன் கோகாய் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றமே தாமாக முன் வந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

நீதிபதிகள் அருண்மிஸ்ரா, நாரிமன் , தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரணையை தொடங்கியது. இந்த விவகாரத்தில் பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, தமது விளக்கத்தை சீலிட்ட கவரில் சமர்ப்பித்தார் உஸ்தவ் பெய்ன்ஸ்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு வைத்தது குறித்த விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு பிற்பகல் 2 மணிக்கு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

பின்னர் கருத்து கூறிய நீதிபதிகள், கடந்த 4, 5 ஆண்டுகளாகவே பண பலம் மற்றும் அதிகார பலம் படைத்தவர்கள் & சச நீதிமன்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம் என்றும் நினைக்கின்றனர். ஆனால் நீதித்துறையை யாரும் ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது . நீதிபதிகள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளை வைத்து நெருக்கடிக்கு ஆளாக்கப் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆவேசமாக கூறினர்.

டிக்-டாக் தடை நீக்கம் - நிபந்தனையுடன் சிக்னல் கொடுத்த நீதிபதிகள்

You'r reading பண பலம் அதிகார பலத்தால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது - உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘மாற்றம் மிகவும் அவசியமானது..!’ –நம்பிக்கையில் காத்திருக்கும் விஜய் சேதுபதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்