பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி யில்லை - டம்மி வேட்பாளரை அறிவித்தது காங்.

Priyanka Gandhi not contest against modi in Varanasi

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடுவாரா ? மாட்டாரா? என்று நீடித்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் மோடிக்கு எதிராக நின்று குறைந்த வாக்குள் பெற்று 3-வது இடம் பிடித்த அஜய்ராய் என்பவரையே மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ்.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரசில் ஒரு தரப்பினர் தூபம் போட, திடீரென உ.பி.அரசியல் களம் பரபரப்பானது. அதற்கேற்றாற்போல் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் உசுப்பேற்ற, கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டால் போட்டியாக் தயார் என பிரியங்கா கூற சஸ்பென்ஸ் நீடித்தது. மேலும் காங்கிரசும் கடைசி வரை வாரணாசி தொகுதிக்கு வேட்பாளர் யாரையும் அறிவிக்காமலே இருந்தது சஸ்பென்ஸை மேலும் அதிகரிக்கச் செய்தது. இதனால் கடைசி நிமிடத்தில் பிரியங்கா பெயர் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் தான் பிரியங்கா சஸ்பென்சுக்கு முடிவு கட்டிய காங்கிரஸ் தலைமை அஜய்ராய் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர் கடந்த 2014 தேர்தலிலும் மோடியை எதிர்த்து போட்டியிட்டு வெறும் 75 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வாரணாசியில் சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணி சார்பில் ஷாலினி யாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் டம்மியாக வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், வாரணாசியில் பிரதமர் மோடிக்கும், சமாஜ் வாதி வேட்பாளர் ஷாலினி யாதவ் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசியில் கடைசி கட்டமாக மே 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடியை எதிர்ப்பது யார்? மிரட்டும் எதிர்க்கட்சிகள்!!

You'r reading பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி யில்லை - டம்மி வேட்பாளரை அறிவித்தது காங். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆற்றில் முதலை இழுத்து சென்ற விவசாய தொழிலாளி சடலமாக கண்டெடுப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்