பிரதமருக்கு குர்தா, ஸ்வீட் அனுப்பியது ஏன்? மம்தா பானர்ஜி விளக்கம்!

Whats Wrong in Sending Him Kurta? Mamata Says Modi Using Her Political Gesture for Poll Marketing.

பிரதமருக்கு குர்தா மற்றும் ஸ்வீட்ஸ் அனுப்பியது ஏன் என்று மம்தா பானர்ஜி விளக்கம் அளித்திருக்கிறார்.

ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பே நடத்தாமல் ஒதுங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு தமக்கு ஆதரவாக உள்ள தொலைக்காட்சிகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்து வருகிறார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அவரை பேட்டி கண்டார். அப்போது மோடி, ‘‘வங்கதேச பிரதமர் எனக்கு அந்நாட்டு ஸ்வீட்ஸ் அனுப்பிய தகவல் கேள்விப்பட்ட மம்தா பானர்ஜியும் எனக்கு ஆண்டுதோறும் ஸ்வீட்ஸ் மற்றும் குர்தா அனுப்பி வருகிறார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.இதை கேட்டதும், பிரதமருடன் அரசியல் ரீதியாக மோதினாலும் அவர் மீது மம்தாவுக்கு இவ்வளவு மரியாதையா? என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்கம் பிர்பும் மாவட்டத்தில் சூரி என்னும் இடத்தி்ல் திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமருக்கு மரியாதை நிமித்தம் ஸ்வீட், குர்தா அனுப்பியதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்கு மட்டுமல்ல, பல தலைவர்களுக்கும் நான் அப்படி அனுப்பியுள்ளேன். மோடி இதைக் கூட அரசியலுக்கு பயன்படுத்துவதை கண்டிக்கிறேன்.

நான் யாரையும் மோசமாக வாழ்த்தியதில்லை. ஆனால், மோடியைப் பாருங்கள்... என்னை போல் மரியாதையை பின்பற்றாமல், பொதுக் கூட்டங்களி்ல் என்னை கேவலமாக விமர்சிக்கிறார்.

நான் ஒரு ‘குண்டர்’ என்று சொல்கிறார்? அப்படியென்றால் அவர் யாராம்? நான் கேட்கிறேன், மகாத்மாவை சுட்டுக் கொன்றது யார்? குஜராத் கலவரத்தை தூண்டியது யார்? மக்கள் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். அவர் ஒரு பொய்யர். அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நான் பாடுபடுகிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார். மோடி தனது பேட்டியில் மம்தாவை பாராட்டுவது போல் பேசியிருந்தாலும், பொதுக் கூட்டங்களில் அவர் பேசும் போது, ‘வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் ‘ஸ்பீடு பிரேக்கர்’ மம்தா’ என்று விமர்சித்து வருவது குறி்ப்பிடத்தக்கது.

பரிசுகள் தருவதால் ஓட்டுகளையும் தருவார்கள் என பகல் கனவு காணவேண்டாம்; மோடிக்கு மம்தா பதிலடி!

You'r reading பிரதமருக்கு குர்தா, ஸ்வீட் அனுப்பியது ஏன்? மம்தா பானர்ஜி விளக்கம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்